/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜெ., பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவி வழங்கல்
/
ஜெ., பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : பிப் 25, 2025 04:52 AM

புதுச்சேரி: அ.தி.மு.க., அலுவலகத்தில், ஜெயலலிதா பிறந்த நாள் விழாவையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
உப்பளம் அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஜெ., பேரவை செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.
ஜெயலலிதா உருவ படத்திற்கும், எம்.ஜி.ஆர்., சிலைக்கும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
ஏழை எளிய மக்களுக்கு சுய தொழில் செய்வதற்காக தள்ளு வண்டிகள், தையல் மிஷன்கள், கிரைண்டர், குக்கர், மிக்ஸி, மின்சாரா அடுப்பு, தவா, வாட்டர் ஹீட்டர், மின் விசிறி, சில்வர் பாத்திரங்கள், கேஸ் ஸ்டவ், ஹாட் பாக்ஸ், இட்லி குக்கர், சலவை பெட்டிகளை வழங்கினர். 700 நபர்களுக்கு இலவச வேட்டி, சேலை, அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராஜாராமன், கோமளா, மாநில இணை செயலாளர் கணேசன், வீரம்மாள், மகாதேவி, திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், முன்னாள் மாநில ஜெ. பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில துணை செயலாளர்கள் குணசேகரன், கருணாநிதி, கணேசன், நாகமணி, ஜெயசோரன், குமுதன், மணவாளன், நகர செயலாளர்கள் அன்பழகன், சித்தானந்தம், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பார்த்தசாரதி, மகளிர் அணி செயலாளர் விமலா, அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி,இளைஞர் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.