/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரேஷனில் விரைவில் வெள்ளை அரிசி சபாநாயகர் செல்வம் தகவல்
/
ரேஷனில் விரைவில் வெள்ளை அரிசி சபாநாயகர் செல்வம் தகவல்
ரேஷனில் விரைவில் வெள்ளை அரிசி சபாநாயகர் செல்வம் தகவல்
ரேஷனில் விரைவில் வெள்ளை அரிசி சபாநாயகர் செல்வம் தகவல்
ADDED : ஆக 27, 2024 04:20 AM

புதுச்சேரி, : புதுச்சேரியில் ஒரு சில நாட்களில் வெள்ளை அரிசி ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் மணவெளி தொகுதி பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பு மற்றும் மகளிர் சுய உதவிக்குழு பிரதிநிதிகளுடன் திட்ட ஆலோசனை மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கி பேசுகையில்;
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் முதல்வர் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இத்துறையில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்தலாம்.
தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள முதல்வர் அறிவுறுத்தினார். அதன்படி முதல் கூட்டம் தற்போது நடக்கிறது.
சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சுழல் நிதி தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை முதல்வரிடம் எடுத்து கூறி விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மகளிர் சுய உதவிக் குழுவினர் பால் உற்பத்தியை பெருக்க, 100 மாடுகள் வரை வளர்ப்பதற்கு அரசு ரூ.1 கோடி வரை மானியம் வழங்குகிறது. இதனை பயன்படுத்தி முன்னேற்ற வேண்டும். மகளிர் தொழில் துவங்க அனைத்து உதவிகளையும் அரசு செய்வதற்கு தயாராக உள்ளது. ஒரு சில நாட்களில் வெள்ளை அரிசி ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் எனப் பேசினார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன், இணை வட்டார வளர்ச்சி அதிகாரி, அலுவலக ஊழியர்கள், சுய உதவி குழுக்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.