தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாண்டிச்சேரி பிரீமியர் லீக் போட்டி ‘ஒயிட் டவுன்’ அணி ‘திரில்’ வெற்றி 

பாண்டிச்சேரி பிரீமியர் லீக் போட்டி ‘ஒயிட் டவுன்’ அணி ‘திரில்’ வெற்றி 

பாண்டிச்சேரி பிரீமியர் லீக் போட்டி ‘ஒயிட் டவுன்’ அணி ‘திரில்’ வெற்றி 


ADDED : ஜூலை 22, 2026 08:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2026 08:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாண்டிச்சேரி பிரீமியர் லீக் 29வது போட்டியில் காரைக்கால் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரூபி ஒயிட் டவுன் அணி திரில் வெற்றி பெற்றது. 

ஸ்ரீராம் கேபிடல் வழங்கம் பாண்டிச்சேரி பிரீமியர் லீக்கின் 3வது சீசன், சீகெம் மைதானத்தில் கடந்த 7 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. அதன் 29வது போட்டியில் காரைக்கால் நைட்ஸ் அணி, ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணி மோதியது. 

டாஸ் வென்ற ஒயிட் டவுன் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த காரைக்கால் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. அணியின் அக்கிப் ஜவாத் 45 ரன்களும், அச்சல் சிங்க்ளா 37 ரன்களும் எடுத்தனர். ஒயிட் டவுன் அணியின் நமன் சர்மா 3 விக்கெட்களை கைப்பற்றினார். 

பின், 151 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஒயிட் டவுன் அணி பவர்பிளே ஓவர்களில் 36 ரன்கள் எடுத்தது. பின், 67 ரன்களை எட்டிய நிலையில், ஆயுத் சர்மா 22 ரன்களிலும், தர்ஷன் ராஜகோபால் 2 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நெயன் காங்கேயன் 36 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி 12 ரன்களுக்கு 4 விக்கெட்களை ஒயிட் டவுன் அணி பறிகொடுத்தது.

ஒயிட் டவுன் அணியின் வெற்றிக்கு கடைசி 5 ஓவர்களில் 47 ரன்கள்  தேவைப்பட்ட நிலையில், அச்சல் சிங்க்ளா வீசிய 19வது ஓவரில் 24 ரன்கள் எடுக்கப்பட்டது. பின், 19.4 ஓவர்களில் ரூபி ஒயிட் டவுன் அணி 6 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அணியில் 19 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த ரோஹன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us