/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனைவியை கொலை செய்தது ஏன்? கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்
/
மனைவியை கொலை செய்தது ஏன்? கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்
மனைவியை கொலை செய்தது ஏன்? கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்
மனைவியை கொலை செய்தது ஏன்? கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்
ADDED : மே 19, 2024 06:36 AM

கடலுார் : கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் இரண்டாவது மனைவியை வெட்டி கொலை செய்ததாக, கைதான கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடலுார் அடுத்த சோனங்குப்பத்தை சேர்ந்தவர் ரமேஷ்,39; மீனவர். இவரது மனைவி இந்துமதி,36; இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்துமதியின் தங்கை சூர்யா,33; என்பவரை ரமேஷ் காதலித்து, 13 ஆண்டிற்கு முன் 2ம் திருமணம் செய்து கொண்டார். சூர்யாவிற்கு 10 வயதில் மகள், மூன்றரை வயதில் மகன் உள்ளனர்.
சூர்யா வேறொருவருடன் பழகியதை ரமேஷ் கண்டித்தார். இது தொடர்பாக தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. உறவினர்களின் சமாதானத்தை ஏற்று இருவரும் முதுநகர் சோனகர் தெருவில் வாடகை வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.
இந்நிலையில் தம்பதிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரமேஷ், நேற்று முன்தினம் காலை துாங்கிக் கொண்டிருந்த சூர்யாவை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.
கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, சிவானந்தபுரத்தில் பதுங்கியிருந்த ரமேஷை நேற்று கைது செய்தனர்.
போலீசில் ரமேஷ் அளித்த வாக்குமூலத்தில், ''முதல் மனைவி இந்துமதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் என்பதால், ஆண் குழந்தைக்காக சூர்யாவை காதலித்து திருமணம் செய்தேன்.
சூர்யாவிற்கு வேறொருவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதை கைவிடுமாறு பலமுறை கண்டித்தும் கேட்காததால் வெட்டிக் கொலை செய்தேன்'' என்றார்.
அதனைத் தொடர்ந்து போலீசார், ரமேஷை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

