தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அமைச்சரவை விரிவாக்கம் செய்யாதது ஏன்? முதல்வர் விளக்கம் தர வேண்டும்; நாராயணசாமி

அமைச்சரவை விரிவாக்கம் செய்யாதது ஏன்? முதல்வர் விளக்கம் தர வேண்டும்; நாராயணசாமி

அமைச்சரவை விரிவாக்கம் செய்யாதது ஏன்? முதல்வர் விளக்கம் தர வேண்டும்; நாராயணசாமி


ADDED : மே 28, 2026 10:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 10:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாததற்கு முதல்வர் ரங்கசாமி விளக்கம் தர வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது: புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அமைச்சரவையை முழுமையாக விரிவாக்கம் செய்யவில்லை. பொறுப்பேற்ற 2 அமைச்சர்களுக்கு இலாக்கா ஒதுக்கப்படவில்லை. காலதாமதத்துக் என்ன காரணம் என்பதை முதல்வர் விளக்க வேண்டும். அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாததால், அரசு பணிகள் ஸ்தம்பித்துள்ளது. இதனால், கோப்புகள் அலுவலகத்தில் துாங்குகிறது.

மேகதாது அணை பிரச்னையில் தமிழக முதல்வர் விஜய், பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் மேகதாது அணை பிரச்னையில் காவிரி கடைமடை பகுதியான, காரைக்கால் பாதிக்கும் நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி எதுவும் கூறாமல் இருக்கிறார். இதுபற்றி அவருக்கு அக்கறையில்லை.

புதுச்சேரியில் இண்டி கூட்டணி தோல்வி அடைந்ததற்கு, கூட்டணி கட்சி தலைவர்களின் தவறான அணுகுமுறை தான் காரணம். தோல்விக்கு நாங்கள் பொறுப்பு ஏற்றது போல் இதர கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும்.

கூட்டணியில் சில கட்சிகள் சேர்வதும், பிரிவதும் இயல்பு. இதற்காக காங்., கட்சியை தி.மு.க., விமர்சிப்பதை ஏற்க முடியாது. அரசியலில் எப்போது வேண்டுமானாலும் சூழல் மாறும். தனிப்பட்ட வெறுப்பு இருக்கக்கூடாது. தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் காங்., போட்டியிடுவது, த.வெ.க.,வுடன் கூட்டணி குறித்து கட்சித் தலைவர்கள் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us