ADDED : ஏப் 11, 2024 03:52 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: வெளியில் சென்ற கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் செய்தார்.
அரியாங்குப்பம் ஆர்.கே., நகரை சேர்ந்தவர் அரவிந்தராஜ், 28; கிரிக்கெட் வீரர். வெளி மாநிலங்களில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்வது வழக்கம்.
கடந்த 6ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்று வருவதாக மனைவியிடம் கூறிச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
அவரது குடும்பத்தினர் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவரை காணவில்லை.
இது குறித்து, அவரது மனைவி கஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
