/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கணவர் இறந்த துக்கத்தில் மனைவி சாவு
/
கணவர் இறந்த துக்கத்தில் மனைவி சாவு
ADDED : ஜூன் 19, 2024 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கணவன் இறந்த ஒரே வாரத்தில் மனைவியும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
புதுச்சேரி சாரம் கவிக்குயில் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் வயது முதிர்வின் காரணமாக கடந்த 12ம் தேதி இறந்தார். இவரது மனைவி கமலம். இருவரும் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் ஒன்றாக சென்று வருவார்கள், வீட்டில் சாப்பிடும் போது, ஒன்றாக தான் சாப்பிடுவார்கள்.
கணவனின் இறப்பால் முனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் கமலம் தனது வீட்டில் திடீரென இறந்தார்.
கணவர் இறந்த ஒரே வாரத்தில் மனைவியும் இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.