ADDED : மே 29, 2024 05:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மனைவி, மகளை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்தார்.
முத்தியால்பேட்டை செயின்ட் ரோசாரியா வீதியை சேர்ந்தவர் அருள்ராஜ், ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 11ம் தேதி தனது மனைவி ஞானவள்ளி, 30; மகன், மகளுடன் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றார்.
வீட்டுக்கு சென்று வருவதாக அருள்ராஜிடம் கூறிவிட்டு ஞானவள்ளி, 8 வயது மகளை அழைத்து சென்றார்.
வெகுநேரமாகியும் இருவரும் வரவில்லை.
சந்தேகமடைந்த அருள்ராஜ், வீட்டிற்கு சென்று பார்த்தபோது, இருவரும் இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவர், நேற்று முத்தியால்பேட்டை போலீசில், தனது மனைவி கோபித்து கொண்டு சென்றுள்ளதாக புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.