ADDED : மே 28, 2026 06:32 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரி குமரகுருபள்ளம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி புஷ்பா (எ) செல்வி, 44. இவர் அடிக்கடி மேல்மருவத்துார் கோவிலுக்கு செல்வது வழக்கம். இவர் கடந்த மார்ச் 8ம் தேதி, லாஸ்பேட்டை வாசன் நகரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார். பின், கணவர் வேலை செய்யும், காந்தி வீதி மார்க்கெட்டிற்கு சென்றவர் மாயமானார்.
இரவு வரை வீட்டிற்கு வராததால், பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
