/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காட்டுப்பன்றிகள் தாக்கி 2 பேர் காயம் திருக்கனுார் அருகே பரபரப்பு
/
காட்டுப்பன்றிகள் தாக்கி 2 பேர் காயம் திருக்கனுார் அருகே பரபரப்பு
காட்டுப்பன்றிகள் தாக்கி 2 பேர் காயம் திருக்கனுார் அருகே பரபரப்பு
காட்டுப்பன்றிகள் தாக்கி 2 பேர் காயம் திருக்கனுார் அருகே பரபரப்பு
ADDED : மே 03, 2024 10:26 PM

திருக்கனுார், - பி.எஸ்.பாளையத்தில் விவசாய நிலத்திற்கு சென்ற இரண்டு பேரை காட்டுப்பன்றிகள் தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருக்கனுார் அடுத்த பி.எஸ்.பாளையம் கிராமத்தின் அருகே உள்ள பம்பை ஆறு மற்றும் ஏரிக்கரைகளில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இவைகள் இரவு நேரங்களில் அருகில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள கரும்பு, நெல், மணிலா, மரவள்ளிக் கிழங்கு உள்ளிட்டவைகளை பிடிங்கி சேதப்படுத்தி வருவதும், விளை நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை தாக்குவதும் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் பலமுறை அரசு மற்றும் வேளாண் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், நேற்று காலை 7:30 மணியளவில் பி.எஸ். பாளையம் தோப்பு தெருவை சேர்ந்த லோகநாதன், 50; என்பவர் தனது விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள கரும்பு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வரப்பில் நடந்து சென்றார்.
அங்கிருந்த காட்டுப்பன்றி ஒன்று திடீரென லோகநாதனை தாக்கிவிட்டு தப்பியோடியது. தொடை பகுதியில் படுகாயமடைந்த லோகநாதனை, அவரது உறவினர்கள் மீட்டு மதகடிப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதனிடையே அதேப் பகுதியை சேர்ந்த தெய்வசிகாமணி, 75; என்பவர் இயற்கை உபாதைக்காக அங்குள்ள விவசாய நிலத்திற்கு சென்றபோது, அவரையும் காட்டுப்பன்றி ஒன்று தாக்கியது. கையில் காயமடைந்த தெய்வ சிகாமணி மதகடிப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல், கூட்டம் கூட்டமாக சுற்றித் தெரியும் காட்டுப் பன்றிகள் நிலத்திற்கு செல்வோரை தாக்கி வருவதால், விவாசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே, விவசாய நிலங்களில் சுற்றி தெரியும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த அரசு மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.