/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பழங்குடியினர் பட்டியலில் மீனவர்கள் சேர்க்கப்படுவரா? வைத்திலிங்கம் எம்.பி., கேள்வி

ADDED : ஆக 02, 2024 11:40 PM
புதுச்சேரி : மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா என, வைத்திலிங்கம் எம்.பி., கேள்வி எழுப்பினார்.
அவர், லோக்சபா கூட்டத்தொடரில், 'பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற மீனவர்களின் கோரிக்கை குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பழங்குடியினர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் துர்காதாஸ் உக்கே அளித்த பதில்;
மத்திய அரசு கடந்த, 1999 ஜூன் 15ம் தேதி பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பட்டியலின பழங்குடியினர் பட்டியலில் மாற்றம் மற்றும் திருத்தம் செய்ய ஒரு வழிகாட்டுதல் முறையை உருவாக்கியுள்ளது.
இதில், கடந்த, 2022 ஜூன்25, மற்றும் அதே ஆண்டு செப்., 14 ஆகிய தேதிகளில் திருத்தமும் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி மாநில அல்லது யூனியன் பிரதேச அரசானது, தகுதியான முன்மொழிவு பரிந்துரைக்கப்பட்டு, அந்த முன்மொழிவானது இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் தேசிய பட்டியலின பழங்குடியினர் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
அதன் பின்னரே, அந்த சாதிகள் மட்டும் பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பட்டியலின பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்படும். அனைத்து நடவடிக்கைகளும் இந்த வழிகாட்டுதல் முறையிலேயே மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.