தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்படுமா?

அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்படுமா?

அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்படுமா?


ADDED : மார் 06, 2025 03:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2025 03:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஹைமாஸ் விளக்கும் மற்றும் மினி ஸ்டேடியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏம்பலம் கிராமத்தில் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

பள்ளியில் இயற்கையான சூழலில் 2 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இங்கு பள்ளி மாணவ-மாணவிகள் மட்டுமின்றி, சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ-மாணவிகள் காலை, மாலையில் விளையாட்டு, நடை மற்றும் ஓட்டப் பயிற்சி செய்து வருகின்றனர்.

மேலும் கரிக்கலாம்பாக்கம், கோர்காடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் இப்பள்ளி மைதானத்தில் விளையாட்டு பயிற்சி மேற்கொள்கின்றனர்.

முக்கியத்துவம் வாய்ந்த இப்பள்ளி மைதானத்தில், கிராமப்புற பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானத்தில் இரவு நேர பயிற்சி மேற்கொள்ளும் வகையில் ஹைமாஸ் விளக்கும் மற்றும் மினி ஸ்டேடியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us