/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்டாக்கில் விண்ணப்பிக்க அவகாசம் நீடிக்கப்படுமா? ஒருங்கிணைப்பாளர் விளக்கம்
/
சென்டாக்கில் விண்ணப்பிக்க அவகாசம் நீடிக்கப்படுமா? ஒருங்கிணைப்பாளர் விளக்கம்
சென்டாக்கில் விண்ணப்பிக்க அவகாசம் நீடிக்கப்படுமா? ஒருங்கிணைப்பாளர் விளக்கம்
சென்டாக்கில் விண்ணப்பிக்க அவகாசம் நீடிக்கப்படுமா? ஒருங்கிணைப்பாளர் விளக்கம்
ADDED : மே 12, 2024 04:46 AM
நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்படும் என சென்டாக் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நீட் அல்லாத தொழிற்படிப்புகளில் 5,264 இடங்கள், கலை அறிவியல் கல்லுாரிகளில் 4,320, நுண்கலை படிப்புகளில் 75, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காமராஜர் அரசு பொறியியல் கல்லுாரி, மகளிர் அரசு பொறியியல் கல்லுாரிகளில் உள்ள பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பில் 334 இடங்கள் என மொத்தம் 9,993 இடங்கள் உள்ளன.
இந்த படிப்புகளுக்கு www.centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளத்தில், கடந்த 7ம் தேதி முதல் விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க 22ம் தேதியுடன் காலக்கெடு வைக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., ரிசல்ட் வெளியாகாத சூழ்நிலையில், சென்டாக்கில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என மாணவ மாணவிகள் வலியுறுத்தி வருகின்றனர். அதையடுத்து, நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்படும் என சென்டாக் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்டாக் ஒருங்கிணைப்பாளர் கூறும்போது, 'தமிழ்நாடு கல்வி வாரிய தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, சென்டாக் மூலம் கடந்த 7ம் தேதி முதல் விண்ணப்பம் பெறப்படுகிறது. 22ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி என குறிப்பிட்டு இருந்தோம்.
கேரளா கல்வி வாரியம் கடந்த 9ம் தேதி பிளஸ் 2 முடிவுகளை வெளியிட்டது. ஆந்திரா கல்வி வாரியம் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே பிளஸ் 2 ரிசல்ட்டை அறிவித்து விட்டது. ஆனால், சி.பி.எஸ்.இ., முடிவுகள் விரைவில் வர உள்ளது.
எனவே, சென்டாக் நிர்வாகம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கும், சமர்பிப்பதற்கும் கடைசி தேதியை நீட்டிக்கும். விண்ணப்பிக்க போதுமான கால அவகாசம் வழங்கும். எனவே மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை' என்றார்.