/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் கம்பங்களில் முளைக்கும் விளம்பர தட்டிகள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
/
மின் கம்பங்களில் முளைக்கும் விளம்பர தட்டிகள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
மின் கம்பங்களில் முளைக்கும் விளம்பர தட்டிகள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
மின் கம்பங்களில் முளைக்கும் விளம்பர தட்டிகள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
ADDED : ஆக 25, 2024 05:39 AM

ன்கம்பம், மரங்களில் கட்டுபாடு இல்லாமல் அதிகரித்து வரும் விளம்பர தட்டிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரியின் சாலைகள், சிக்னல்கள், முக்கிய ரவுண்டானாக்களில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில், பேனர்கள் கண்டமேனிக்கும் வைக்கப்படுகிறது. கோர்ட் தலையிட்ட பிறகு புதுச்சேரியில் பேனர்கள் வைப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் வேறு வகைகளில் பேனர்கள், விளம்பர பலகைகள், விளம்பர தட்டிகள் முளைத்து வருகின்றன.
குறிப்பாக, மின் கம்பங்களில் விளம்பர தட்டிகள் வைப்பது அனைத்து பகுதிகளிலும் அதிகரித்து வருகிறது. இந்த பலகைகள் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்புவதோடு, மின் துறை ஊழியர்களுக்கும் தலைவலியாக மாறி உள்ளது.
மின்கம்பங்களில் விளம்பர தட்டிகளை கட்டி வைத்துள்ளதால், அவசரத்திற்கு ஏறி மின்விளக்கு பழுதுகளை சரி செய்ய முடியாமல் மின் துறை ஊழியர்கள் திண்டாடி வருகின்றனர். அடுத்து சாலையோர மரங்களிலும் இதேபோல் விளம்பர தட்டிகள் அமைத்து வருகின்றனர்.
இது குறித்து யார் நடவடிக்கை எடுப்பது என்பது தெரியாமல், போலீஸ், மின் துறை, வனத்துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை துறை, உள்ளாட்சி என ஒவ்வொரு துறையும் தங்களது கடமையை தட்டி கழித்து வருகின்றனர். அரசு துறைகள் வேடிக்கை பார்ப்பதால் மின்கம்பங்களின் விளம்பர தட்டிகள் அதிகரித்து வருகின்றது.
மின்கம்பம், மரங்களில் விளம்பர தட்டிகளை சிலர் இரும்பு ஏணிகள் மீது ஏறி கட்டுகின்றனர். இதனால் உயிரிழப்பு அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஏதேனும் அசம்பாவிதத்தால் உயிரிழப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு ஏற்பது. அசம்பாவிதம் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, முன் கூட்டியே தடுப்பதே முக்கியம்.
எனவே, சாலை, சென்டர் மீடியன்களில் பேனர்கள் வைப்பதை முறைப்படுத்தியது போன்று மின் கம்பம், மரங்களில் முளைத்து வரும் விளம்பர தட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக கலெக்டர், மின் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்கம்பங்களில் விளம்பர பலகை, தட்டிகள் கட்டுபவர்கள் மீது வழக்கு பதிய வேண்டும்.