/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆரியப்பாளையம் பழைய பாலத்தில் தடுப்பு கட்டைகள் சீரமைக்கப்படுமா?
/
ஆரியப்பாளையம் பழைய பாலத்தில் தடுப்பு கட்டைகள் சீரமைக்கப்படுமா?
ஆரியப்பாளையம் பழைய பாலத்தில் தடுப்பு கட்டைகள் சீரமைக்கப்படுமா?
ஆரியப்பாளையம் பழைய பாலத்தில் தடுப்பு கட்டைகள் சீரமைக்கப்படுமா?
ADDED : மார் 02, 2025 04:12 AM

ஆரியப்பாளையம் சங்கராபரணி ஆற்று பழைய பாலத்தில், சேதமடைந்த தடுப்பு கட்டைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ள சங்கராபரணி ஆற்றில், ஆரியப்பாளையம் பகுதியில், தமிழக பொதுப்பணித்துறை சார்பில் கடந்த 1970ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. 1,177 அடி நீளம் கொண்ட இப்பாலம், கடந்தாண்டு இறுதியில் வந்த பெஞ்சல் புயல் மற்றும் வரலாறு காணாத மழையால், வெள்ளத்தில் மூழ்கியது.
தொடர்ந்து ஒரு வார காலம் கரைபுரண்டு ஓடிய மழைவெள்ளத்தில், பழைய பாலத்தின் இருபுரத்திலும் உள்ள தடுப்பு கட்டைகள் சேதமடைந்தன. பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை பிரிவு அதிகாரிகள், இந்த பழைய பாலத்தை ஆய்வு செய்து, இருபுறத்திலும் சேதமடைந்துள்ள தடுப்பு கட்டைகளை சீரமைக்க வேண்டும். மேலும், தற்போது காட்சி பொருளாக உள்ள பழைய பாலத்தில், தொடர்ந்து வாகனங்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.