/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை வழக்கு மர்மம் விலகுமா? 4 ஆண்டுகள் ஆகியும் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல்

ADDED : செப் 08, 2024 05:45 AM
பாகூர் அடுத்த இருளஞ்சந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் புருேஷாத்தமன், 49; கரசூர் கிராமத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார். மனைவியை பிரிந்த, இவர் அய்யங்குட்டிப்பாளையம் அமைதி நகரில் தனது தாயாருடன் வசித்தார்.
கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி இரவு 10:30 மணிக்கு, கரசூர் பெட்ரோல் பங்கில் இருந்து தனது பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். ஊசுட்டேரி லட்சுமிநாராயணா மருத்துவ கல்லுாரி அருகே அன்று இரவு 11:30 மணிக்கு, சாலையோரம் கழுத்து அறுக்கப்பட்டு புருேஷாத்தமன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
வில்லியனுார் போலீசார் உடலை கைப்பற்றி கொலை வழக்கு பதிந்தனர். அப்பகுதியில் பொருத்தி இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஹெல்மெட் அணிந்த 2 வாலிபர்கள், புருேஷாத்தமன் பைக்கை பின் தொடர்ந்து செல்வது தெரியவந்தது.
இதனால் 2 வாலிபர்கள் புருேஷாத்தமனை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி இருக்கலாம் என போலீசார் முடிவுக்கு வந்தனர். இரவு நேரம் என்பதால் கொலையாளிகள் பைக் எண் தெளிவாக தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு கடந்த 2020ம் ஆண்டு இறுதியில் அரியாங்குப்பம் போலீசுக்கு மாற்றப்பட்டது.
வில்லியனுாரில் உடல் கண்டு எடுக்கப்பட்ட வழக்கு, ஏன் அரியாங்குப்பத்திற்கு மாற்றப்பட்டது என்பதற்கான காரணத்தை போலீசார் தெரிவிக்கவில்லை.
4 ஆண்டுகள் கடந்தும் கொலை வழக்கில் துப்பு கிடைக்காமல் பல மர்மம் நிறைந்த கொலையாக பேசப்படும் இந்த வழக்கு, புதுச்சேரி சட்டம் ஒழுங்கு போலீசார் மீதுள்ள நம்பிக்கையை சந்தேகிக்கும் வகையில் உள்ளது. இந்த கொலை வழக்கு விரைவில் சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கப்படலாம் என தெரிகிறது.