ADDED : ஜூலை 27, 2026 10:23 PM
புதுச்சேரி: வீட்டில் கஞ்சா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுப்பட்னர். அப்போது வில்லியனுார் அமீனா நகர் பகுதியில் வீட்டில் ஒரு பெண் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வில்லியனுார் மகளிர் சப் இன்ஸ்பெக்டர் பிர்ணெஸ்வரி மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு செய்து சோதனை செய்தனர். இதில் ஒரு வீட்டில் ஒரு பெண் கஞ்சா விற்றது தெரியவந்தது. அதையடுத்து அப்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் வில்லியனுார் கோபாலன்கடை அமீனா நகர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ் மனைவி ஷாலினி 19, என்பதும், அவர் சிறுவர்களுக்கு கஞ்சா விற்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின் அவரிடம் இருந்த 290 கிராம் உலர்ந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
