ADDED : மே 04, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : எலிபேஸ்ட் சாப்பிட்ட பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஏம்பலம் அடுத்த நல்லாத்துார் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாலா, 30. இவர், கடந்த 1ம் தேதி மதியம் குடும்ப பிரச்னை காரணமாக கோபித்துக்கொண்டு புதுச்சேரி பாரதி பூங்காவிற்கு வந்தார்.
கணவரை மிரட்டுவதற்காக அங்கு அவர் வைத்திருந்த எலி பேஸ்ட்டை சாப்பிட்டு வீட்டிற்கு சென்றார். மயக்கமடைந்த மாலா சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.