தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் பலி

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் பலி

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் பலி


ADDED : மே 08, 2024 02:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2024 02:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார் : திருக்கனுார் அருகே நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த பெண் இறந்தார்.

திருக்கனுார் அடுத்த மணலிப்பட்டு கோரைக்கேனி பாதையைச் சேர்ந்தவர் மனோகர்; கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி 50; திருபுவனை பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை தனது மகன் மதன்குமாருடன் ஜெயலட்சுமி பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

திருக்கனுார் அடுத்த தமிழக பகுதியான புதுக்குப்பம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது நாய் ஒன்று குறுக்கே வந்ததால் மதன்குமார் திடீரென பிரேக் போட்டார்.

அப்போது பைக்கில் அமர்ந்திருந்த விஜயலட்சுமி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் தலையில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஜெயலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us