ADDED : மே 10, 2024 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை: திருபுவனை அருகே கரும்பு தோட்டத்தில் கீரை பரிக்கச் சென்ற பெண் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி, இவரது மனைவி சரசு 52; கடந்த சில நாட்களாக திருபுவனை தோப்புத்தெருவில் வசிக்கும் தனது மகன் சரவணன் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் மாலை அருகில் உள்ள கரும்புத்தோட்டத்திற்கு கீரை பறிக்கச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் விவசாய வேலைக்காக கரும்புத்தோட்டத்தின் வழியே சென்றபோது சரசு மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.
திருபுவனை போலீசார் சரசு உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.