/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சவுக்கு தோப்பில் பெண் மர்ம சாவு
/
சவுக்கு தோப்பில் பெண் மர்ம சாவு
ADDED : ஆக 08, 2024 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : காரைக்கால் கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மர்மமான இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால் கடற்கரை சவுக்கத் தோப்பில் நிர்வாண நிலையில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று காலை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என, தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.