
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பாதாள சாக்கடை சரிசெய்ய வலியுறுத்தி, பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முத்தியால்பேட்டை சோலை நகர் தெற்கு செங்கேணி அம்மன் கோவில் தெரு பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக, பாதாள சாக்கடை நிரம்பி சாலைகளில் வழிந்தோடுகிறது.
இதுதொடர்பாக, அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கழிவு நீர் சாலையில் வழிந்தோடுவதோடு, வீட்டினுள் புகுந்தது.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பாதாள சாக்கடையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி நேற்று மாலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.