/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆயுஷ் மருத்துவமனையில் மகளிர் தின விழா
/
ஆயுஷ் மருத்துவமனையில் மகளிர் தின விழா
ADDED : மார் 07, 2025 04:57 AM

வில்லியனுார் : வில்லியனுார் ஆயுஷ் மருத்துவமனை சித்தா மருத்துவ பிரிவு, புதுச்சேரி இம்ப்காப்ஸ் மருத்துவமனை இணைந்து மகளிர் தின விழா கொண்டாடினர்.
விழாவிற்கு, ஆயுஷ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். சித்த மருத்துவப் பிரிவு தலைமை டாக்டர் இந்திரா வரவேற்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் சிவா, பங்கேற்று 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு அமுக்கரா சூரணம், கீழா நெல்லி மாத்திரை மற்றும் வலி நிவாரணிகள் அடங்கிய மருந்து பெட்டகத்தை வழங்கினார்.
புதுச்சேரி இம்ப்காப்ஸ் நிறுவன டாக்டர்கள் ஸ்ரீதர், கல்பனா, சசிகலா, மருந்தா ளுநர்கள் ரேவதி, பிரியா மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் மணிகண்டன், தர்மராஜ், ஜலால் அணிப், ரமணன், செல்வநாதன், ஹாலித், அங்காளன், சுப்பிரமணியன், ஏழுமலை கலந்து கொண்டனர்.