/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மருத்துவமனையில் மகளிர் தின விழா
/
அரசு மருத்துவமனையில் மகளிர் தின விழா
ADDED : மார் 09, 2025 03:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி இந்திரகாந்தி, அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில், நேற்று மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
மருத்துவக் கண்காணிப்பாளர் செவ்வேள் தலைமை தாங்கினார். உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமிமுனிசா பேகம், மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன், குறை தீர்ப்பு அதிகாரி ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், தலைமை மருத்துவ அதிகாரி உதயக்குமார், சீனியர் மருத்துவர்கள் ஜெயந்தி, ஆடிசெல்வி உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பெண் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.