/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராஜ்பவன் தொகுதியில் மகளிர் தின விழா
/
ராஜ்பவன் தொகுதியில் மகளிர் தின விழா
ADDED : மார் 09, 2025 05:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மகளிர் தினத்தையொட்டி, ராஜ்பவன் தொகுதியில் உள்ள மகளிர்களுக்கு விக்னேஷ் கண்ணன் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, முன்னாள் சபாநாயகர் கண்ணனின் மகன் விக்னேஷ் கண்ணன், ராஜ்பவன் தொகுதி முழுதும் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று, மகளிர்களுக்கு இனிப்பு வழங்கி மகளிர் தின வாழத்து தெரிவித்தார்.
அப்போது, விக்னேஷ் கண்ணனுக்கு சால்வை அணிவித்து பெண்கள் வரவேற்றனர். அவரது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் உடனிருந்தனர்.