/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரதிதாசன் கல்லுாரியில் மகளிர் தின கவியரங்கம்
/
பாரதிதாசன் கல்லுாரியில் மகளிர் தின கவியரங்கம்
ADDED : மார் 08, 2025 03:44 AM

புதுச்சேரி : பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லுாரியில் நேற்று சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார். பேராசிரியர் மணி வரவேற்றார். பொதுப்பணித்துறை சிறப்புக் கட்டடங்கள் பிரிவு செயற்பொறியாளர் கஜலட்சுமி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். சத்யா சிறப்புப் பள்ளி இயக்குநர் சித்ரா ஷா சிறப்புரையாற்றினார்.
தமிழ்த்துறைத் தலைவர் சேதுபதி தலைமையில் கவியரங்கம் நடந்தது. 'பெண்மை வெல்க' என்னும் தலைப்பில் மாணவிகள் பிரவீனா, பரமேஸ்வரி, கீர்த்தனா, ஹரிதா, அர்ச்சனா கவிதை வாசித்தனர். விழிப்புணர்வு கோலப்போட்டி நடந்தது.
பேராசிரியர் பட்டம்மாள் தலைமையில் மகளிர் மற்றும் சிறுமியர் எதிர்கொள்ளும் சவால்கள் என்னும் தலைப்பில் உரையரங்கம் நடந்தது. மாணவிகள் கிரண்யா, பாத்திமா நாச்சியார், ஈஸ்வரி, ஆதிலட்சுமி, பார்கவி, ஷோபனா உரையாற்றினர். பேராசிரியர் ராஜகுமாரி நன்றி கூறினார்.