தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகளிர் சுய உதவிக்குழுவின் ஆண்டு தணிக்கை நிகழ்ச்சி

மகளிர் சுய உதவிக்குழுவின் ஆண்டு தணிக்கை நிகழ்ச்சி

மகளிர் சுய உதவிக்குழுவின் ஆண்டு தணிக்கை நிகழ்ச்சி


ADDED : மே 15, 2026 08:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 08:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவின் ஆண்டு தணிக்கை செய்தல் நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவக கட்டுப்பாட்டில் 42 பஞ்சாயத்துகளில் பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான மகளிர் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகள் செயல்பட்டு வருகிறது.

அதன் வரவு செலவு கணக்குகள் திட்ட வழிகாட்டுதல் படி குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, வில்லியனுார் வட்டார வளர்ச்சி அதிகாரி சிவசங்கரன் அறிவுறுத்தலின்படி, 42 பஞ்சாயத்து அளவிலான மகளிர் குழு மற்றும் கூட்டமைப்புகளின் நடப்பாண்டிற்கான உள்தணிக்கையை சமூக பணியாளர் குழுக்கள் வெளித்தணிக்கையை பட்டய கணக்காளர்கள் மூலம் தணிக்கை செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலக இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கலைமதி,  திட்ட இணைப்பு அதிகாரி சாந்தமூர்த்தி, கிராம சேவக்குகள், திட்டபணியாளர்கள், வட்டார அளவிலான மகளிர் கூட்டமைப்பு  வல்லுநர்கள் மற்றும் கணக்காளர்கள் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us