தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழிலாளி அடித்து கொலை மனைவி, மகன் கைது

தொழிலாளி அடித்து கொலை மனைவி, மகன் கைது

தொழிலாளி அடித்து கொலை மனைவி, மகன் கைது


ADDED : ஜூலை 02, 2026 05:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 05:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ரிஷிவந்தியம்: கள்ளக்குறிச்சி அருகே போதையில் தகராறு செய்த தொழிலாளியை அடித்து கொலை செய்த மனைவி, மகனை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே புஷ்பகிரி கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன்,50; கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருக்கு, சித்ரா, 45; என்ற மனைவியும், காயத்ரி என்ற மகளும், அன்பழகன் உட்பட இரண்டு மகன்களும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த அர்ச்சுனன், மனைவி சித்ராவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூத்த மகன் அன்பழகன்,19; கட்டையால் அர்ச்சுனனின் தலையில் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அர்ச்சுனன் மயங்கி விழுந்து இறந்தார்.

தகவலறிந்த பகண்டை கூட்ரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அர்ச்சுனனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஷஹ்னாஸ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

பகண்டை கூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து, மனைவி சித்ரா, 45; மகன் அன்பழகன்,19; இருவரையும் கைது செய்தனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us