தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வழுக்கி விழுந்த தொழிலாளி சாவு

வழுக்கி விழுந்த தொழிலாளி சாவு

வழுக்கி விழுந்த தொழிலாளி சாவு


ADDED : மே 22, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2026 07:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: எலும்பு முறிவு ஏற்பட்டு வீட்டில் இருந்த தொழிலாளி பாத் ரூமில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார்.

தவளக்குப்பம், தானாம்பாளையம், புதுநகரை சேர்ந்தவர் பாபு, 61; கூலி வேலை செய்து வந்தார். கடந்த 2023ம் ஆண்டு இவர் கீழே விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்தார். 

நேற்று முன்தினம் பாத் ரூமிற்கு சென்றார். அங்கு வழுக்கி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  உனடியாக அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்ததை உறுதி செய்தனர். தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us