நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வில்லியனுார், வெள்ளாழர் வீதியைச் சேர்ந்தவர் இளங்கோவன், 62; கூலித்தொழிலாளி.
திருமணமாகி இதுவரை குழந்தை இல்லை. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவர் அவ்வப்போது மருத்துமவனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நோயின் தாக்கம் அதிகமானதால் மனமுடைந்த இளங்கோவன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.