/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை
/
தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை
ADDED : ஜூன் 27, 2024 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: கட்டட தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருமாம்பாக்கம் அடுத்த சார்காசிமேடு கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் 53; கட்டட தொழிலாளி. சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால், மனமுடைந்த அன்பழகன், நேற்று முன்தினம் இரவு வீட்டு தோட்டத்தில் இருந்த வேப்ப மரத்தில் துாக்குப் போட்டுக் கொண்டார். குடும்பத்தினர் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.