UPDATED : ஜூன் 04, 2026 08:22 PM
ADDED : ஜூன் 04, 2026 07:52 PM
புதுச்சேரி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பா.ஜ., சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
பிரதமர் மோடியின் 12 ஆண்டு சாதனைகளை முன்னிட்டு பா.ஜ., சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. அதன் ஒரு பகுதியாக, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தாயின் பெயரில் ஒரு மரக்கன்று என்ற திட்டத்தின் கீழ், அனைத்து மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமையில், மரக்கன்றுகள் பொறுப்பாளர்களுக்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் பொறுப்பாளர்கள், முன்னாள் சபாநாயகர் செல்வம், அசோக் பாபு, ஜெயலட்சுமி, புகழேந்தி, செந்தாமரைக்கண்ணன், மாநில பொதுச் செயலாளர்கள் மோகன்குமார், லட்சுமிநாராயணன், மாநில துணைத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
