/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உலக ஓசோன் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்
/
உலக ஓசோன் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : செப் 17, 2024 04:19 AM

புதுச்சேரி, : புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக ஓசோன் தினம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
உலகில் வாழும் அனைத்து உயிரினங்களையும் சூரியனின் புற ஊதா கதிர் வீச்சிலிருந்து பாதுகாத்து வரும் ஓசோன் படலத்தின் அவசியத்தை உணர்த்தும் பொருட்டு, ஆண்டுதோறும் 'ஓசோன் படலம் பாதுகாப்பு தினம்' அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக ஓசோன் தினம் குறித்த கருத்தரங்கம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில் நேற்று நடந்தது.
புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் வரவேற்றார். அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சுழல் துறையின் முதுநிலை அறிவியல் அதிகாரி முனைவர் சகாய ஆல்ஃபிரட், உலக ஓசோன் தின உறுதிமொழி மற்றும் நோக்கவுரை ஆற்றினார்.
சுற்றுச்சூழல் குளிர்சாதன மற்றும் ஏர் கண்டிஷனிங் பயிற்சி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கமலக்கண்ணன், கனகசபாபதி கலந்து கொண்டு 'மொன்ட்ரியல் ஒப்பந்தம்: காலநிலை மாற்றம் தடுப்பு நடவடிக்கையை துரிதப்படுத்துதல்' குறித்து பேசினர்.
இதில், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அதிகாரிகள், தொழிற்சாலை உரிமையாளர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு ஓசோன் சிதைவு மற்றும் புவி வெப்பமடைதல் குறித்த விழிப்புணர்வு பெற்றனர்.