/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆச்சாரியா பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் உலக தொலைத் தொடர்பு தினம்
/
ஆச்சாரியா பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் உலக தொலைத் தொடர்பு தினம்
ஆச்சாரியா பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் உலக தொலைத் தொடர்பு தினம்
ஆச்சாரியா பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் உலக தொலைத் தொடர்பு தினம்
ADDED : ஜூலை 20, 2024 05:00 AM

புதுச்சேரி: வில்லியனூர் ஆச்சாரியா பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியில் ஐ.இ.ஐ., சார்பில் உலக தொலை தொடர்பு தின விழா நடந்தது.
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் தலைவர் அன்ஃபின்ஸ்டன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் குருலிங்கம் தொலைத்தொடர்பு முக்கியத்துவம் குறித்து பேசினார். ஐ.இ.ஐ., தலைவர் திருஞானம், மாணவர்கள் ஐ.இ.ஐ.,யில் சேர்வதன் முக்கியத்துவம், நன்மைகள் குறித்தும், முக்கிய தொழில்துறைக்கான திறனை வளர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
இதில், ஹலோ எப்.எம்., 106.4 புதுச்சேரி நிகழ்ச்சித் தலைவர் மணிவண்ணன், பங்கேற்று மாணவர்களிடம் தொலைத் தொடர்பின் சமீபத்திய தொழில் நுட்பம் மற்றும் ரேடியோ ஜாக்கி வேலை குறித்து பேசினார்.
மைசூர் அகில இந்திய வானொலி நிலைய இளங்கோவன் பழையது முதல் புதியது வரையிலான தொலைத்தொடர்புகள் குறித்து விளக்கினார். இதில், தொலைத்தொடர்பு துறையில் சமீபத்திய தொழில் நுட்பங்கள், தங்கள் கருத்துக்களை போஸ்டர் மற்றும் மாடல்கள் மூலம் மாணவர்கள் முன்வைத்தனர்.
விழாவில், வெற்றி பெற்ற முதல் இரண்டு குழுக்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தலைவர் ஆனந்தகுமார் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை கல்லுாரி முனைவர் நிவேதா, வளர்மதி, சசிகுமார் மற்றும் அனைத்து பேராசிரியர்கள் செய்திருந்தனர்.