ADDED : மே 14, 2024 05:03 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: நல்லாத்துார் திரவுபதியம்மன் கோவிலில் மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த தமிழக பகுதியான நல்லாத்துார் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 5ம் தேதி துவங்கியது.
அன்று முதல் தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகளும், இரவு சுவாமி வீதியுலா நடந்து வந்தது. 8ம் தேதி திருக்கல்யாணம் உற்சவமும், 10ம் தேதி தீமிதி உற்சவமும், 11ம் தேதி அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது.
நேற்று முன்தினம் விடையாற்றி உற்சவம் நடந்தது. விழாவில் ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை நல்லாத்துார் கிராம மக்கள் செய்திருந்தனர்.
