/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
யோகாசன சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டி
/
யோகாசன சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டி
ADDED : செப் 03, 2024 06:27 AM

புதுச்சேரி : புதுச்சேரி சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கம் மற்றும் யோகாசன பாரத் இணைந்து மாவட்ட அளவிலான யோகாசன சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டி இ.சி.ஆர். சாலையில் உள்ள ராஜராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்தது.
சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கத் தலைவர் ஆனந்த பாலயோகி பவனானி குத்துவிளக்கேற்றி போட்டியினை துவக்கி வைத்தார்.
சங்க பொது செயலாளர் தயாநிதி யோகாசன செயல் முறை விளக்கமளித்தார். இதில் 500க்கும் மேற்பட்டோர் யோகாசன விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, சபாநாயகர் செல்வம், நேரு எம்.எல்.ஏ., புதுச்சேரி ஒலிம்பிக் சங்க பொது செயலாளர் தனசேகரன், சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கத் தலைவர் ஆனந்த பாலயோகி பவனானி, சங்க துணைத் தலைவர் தேவசேனா பவனானி, சங்க பொருளாளர் சண்முகம், தமிழ் நாடு விளையாட்டு யோகாசன சங்க செயலாளர் ரவி ஆறுமுகம், சென்னை மற்றும் யோகாலயா எல்த் கேர் நிறுவனம் சென்னை இயக்குநர் எழில்பிரியா ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
இதில், சங்கத் துணை தலைவர் தேவசேனா பவனானிக்கு வாழ் நாள் சாதனையாளர் 'குளோபல் ஐ கான்' விருது வழங்கப்பட்டது. யோகா ஆசிரியர்களுக்கு யோகா திலகம், யோகச்செம்மல், யோகா சேவ ரத்தனா விருதுகள் வழங்கப்பட்டன.
சங்க பொது உறுப்பினர் லலிதா சண்முகம், யோகா ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர்.
சங்க துணை செயலாளர் டாக்டர் பாலாஜி நன்றி கூறினார்.