தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ யோகா போட்டி பரிசளிப்பு விழா

யோகா போட்டி பரிசளிப்பு விழா

யோகா போட்டி பரிசளிப்பு விழா


ADDED : ஆக 05, 2026 07:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 07:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பீஸ் மற்றும் யோகா சென்டர் சார்பில், மாநிலங்களுக்கிடையேயான யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு மாநிலங்களுக்கிடையேயான யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி முதலியார்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. போட்டியில், சிறப்பு பிரிவுகள் மற்றும் ஆர்டிஸ்டிக் யோகா, ரிதமிக் யோகா என, மொத்தம் 9 பிரிவுகளில் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில், ஆண்கள் பிரிவிற்கான சாம்பியன் பட்டத்தை தருன்ராஜ், பெண்கள் பிரிவிற்கான சாம்பியன் பட்டத்தை தேவஸ்ரீ பெற்றனர். 2025–26ம் ஆண்டில் தேசிய மற்றும் மாநில அளவில் பல போட்டிகள் பங்கேற்று சாம்பியன் பட்டம் வாங்கிய, சிறந்த சாதனையாளர் விருது அகில்யோகனுக்கு வழங்கப்பட்டது. 

வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பாண்டிச்சேரி யோகா மற்றும் ஸ்போர்ட்ஸ் டெவெலப்மென்ட் அசோசியேஷன் தலைவர் தசரதன், பீஸ் மற்றும் க்யூர் யோகா சென்டர் பொதுச் செயலாளர் உமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us