ADDED : ஜூன் 21, 2026 06:20 PM
அ நிறம் | அளவு
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் 12 வது உலக யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.
பல்கலைகழக யோகா கல்வி மையம் சார்பில், விளையாட்டு திடலில் நடைபெற்ற யோகா தின விழாவிற்கு, பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேல் தலைமை தாங்கி பேசினார். பல்கலை மாணவர்கள் மற்றும் என்.சி.சி., மாணவர்கள, மற்றும் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகா செய்தனர். பல்கலைக்கழக வளர்ச்சி குழு தலைவர் கோபிநாத், யோகா கல்வி மைய இயக்குநர் அம்பேத்கர், 6வது தமிழ்நாடு பட்டாலியன் என்.சி.சி., அதிகாரி கர்னல் சக்ரபர்த்தி ஆகியோர் பங்கேற்று பேசினர். பேராசிரியர் ருக்மணி பயிற்சி அளித்தார். உதவி பேராசிரியர் சுசீலா நன்றி கூறினார்.
