ADDED : ஜூன் 28, 2026 08:40 PM
புதுச்சேரி: சர்வதேச யோகா தின விழாவினையொட்டி, ஓடும் ரயிலில் யோகா செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது.
பீஸ் மற்றும் கியூர் யோகா சென்டர் சார்பில், 12வது தேசிய யோகா தினம் கொண்டாடப்பட்டது. புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து விழுப்புரம் செல்லும் ரயிலில் யோகா செயல் விளக்கம் நேற்று நடந்தது. நிகழ்சியில் புதுச்சேரி யோகா மற்றும் யோகா ஸ்போர்ட்ஸ் டெவலெப்மெண்ட் அசோசியேஷன் தலைவர் தசரதன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தற்காலிக சபாநாயகர் அன்பழகன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பீஸ் மற்றும் கியூர் யோகா சென்டரில் பயிற்சி பெறும் 65 வயது வரையுள்ள சிறுவர்-, சிறுமிகள் மற்றும் ஆண்கள்,-பெண்கள் உள்ளிட்ட பலர் யோகா செயல்விளக்கத்தை செய்து காண்பித்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பீஸ் மற்றும் கியூர் யோகா சென்டர் பொதுச்செயளாளர் உமா செய்திருந்தார்.
