/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாராமெடிக்கல் கல்லுாரி இ.எஸ்.ஐ.சி., இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
/
பாராமெடிக்கல் கல்லுாரி இ.எஸ்.ஐ.சி., இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
பாராமெடிக்கல் கல்லுாரி இ.எஸ்.ஐ.சி., இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
பாராமெடிக்கல் கல்லுாரி இ.எஸ்.ஐ.சி., இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 23, 2024 06:55 AM
புதுச்சேரி: பாராமெடிக்கல் கல்லுாரியில் உள்ள இ.எஸ்.ஐ.சி., காப்பீட்டு நபர் இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இ.எஸ்.ஐ.சி., மண்டல இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இ.எஸ்.ஐ.சி., கழகத்தில் காப்பீட்டு செய்த நபர்களின் வாரிசுதாரர்களிடமிருந்து காப்பீட்டு நபர் இட ஒதுக்கீட்டின் கீழ் இ.எஸ்.ஐ.சி., குல்பர்காவில் உள்ள பாராமெடிக்கல் கல்லுாரியில் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான பாராமெடிக்கல் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கடந்த மார்ச் 31ம் தேதியன்று இ.எஸ்.ஐ., கழகத்தில் காப்பீடு செய்யப்பட்ட நபராக இருக்க வேண்டும். அவர்களது வாரிசுகள் காப்பீட்டு நபர் இட ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள், சேர்க்கை தகுதியை கண்டறியவதற்கான வார்டு ஆப் ஐ.பி., சான்றிதழ் பெறுவதற்கு அருகில் உள்ள கிளை அலுவலகம், மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு கடந்த 12ம் தேதி www.esic.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பினை பார்க்கவும். முறையாக பூர்த்தி செய்து, ஸ்கேன் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை இ-மெயில் மூலம் வரும் 26ம் தேதி இரவு 11:50 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள இ.எஸ்.ஐ., கிளை அலுவலகம், மண்டல அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

