sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ படைப்புகளை காட்சிப்படுத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

படைப்புகளை காட்சிப்படுத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

படைப்புகளை காட்சிப்படுத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


ADDED : மே 20, 2024 04:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2024 04:09 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : வளர்கலை கூடத்தில் படைப்புகளை காட்சிப் படுத்த ஆன்லைனில் விண்ணப்பம் வாங்கப்படும் என கலை பண்பாட்டு துறை இயக்குனர் கலியபெருமாள் தெரிவித்தார்.

சர்வதேச அருங்காட்சியக தினத்தையொட்டி புதுச்சேரி அரசு கலைப் பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் புதுச்சேரி வளர் கலைக்கூடம் மூன்றாம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி நடந்தது.

கலைப் பண்பாட்டுத் துறை இயக்குனர் கலியபெருமாள் பேசியதாவது:

புதுச்சேரியில் திறமையான ஓவியர்கள் உள்ளனர். ஆனால் அவர்களது படைப்புகளை காட்சிப் படுத்த சரியான இடம் இல்லாமல் இருந்தது.இதன் காரணமாகவே இந்த வளர் கலைக் கூடம் ஏற்படுத்தப்பட்டது.

இப்போது இங்கு ஓவியர்கள் குழுவாக இணைந்து படைப்புகளை விற்பனைக்கு காட்சிப் படுத்தி வருகின்றனர்.ஓவியர்கள் தனித்தனியாகவும் படைப்புகளை வைக்க ஏற்பாடு நடந்து வருகின்றது.இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் வழங்கவும் முடிவு செய்து, பணிகளை வேகப்படுத்தி வருகின்றோம்.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் இந்திரா காந்தி அறிவியல் மைய இயக்குனர் கோபால்.காட்சிக்கலை ஒரு உலகளாவிய பார்வை என்ற தலைப்பில் பேசினார்.புதுச்சேரி ஓவியர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us