/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பழைய சான்றிதழ்களை கொண்டு விண்ணப்பிக்கலாம் சென்டாக் நிர்வாகம் புதிய அறிவிப்பு
/
பழைய சான்றிதழ்களை கொண்டு விண்ணப்பிக்கலாம் சென்டாக் நிர்வாகம் புதிய அறிவிப்பு
பழைய சான்றிதழ்களை கொண்டு விண்ணப்பிக்கலாம் சென்டாக் நிர்வாகம் புதிய அறிவிப்பு
பழைய சான்றிதழ்களை கொண்டு விண்ணப்பிக்கலாம் சென்டாக் நிர்வாகம் புதிய அறிவிப்பு
ADDED : ஜூன் 09, 2024 03:49 AM
புதுச்சேரி, : நீட் அல்லாத படிப்புகளுக்கு நாளை 10ம் தேதியுடன் காலக்கெடு முடிகின்ற சூழ்நிலையில் பழைய சான்றிதழ்கள் கையில் இருந்தாலும் அதை கொண்டு விண்ணப்பிக்கலாம் என, சென்டாக் அறிவித்துள்ளது.
சென்டாக்கின் நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை அல்லாத படிப்புகளுக்கு www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் கடந்த மே மாதம் 8ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. விண்ணப்பிக்க காலக்கெடு மே மாதம் 22ம் தேதி வரை அளிக்கப்பட்டு இருந்தது.
மாணவர்கள், பெற்றோர்களின் கோரிக்கை ஏற்று மே மாதம் 31ம் தேதி ஆன் லைனில் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு மாணவ மாணவிகள் விண்ணப்பித்து வந்தனர்.
பல்வேறு காரணங்களால் 3,100 மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பித்தினை பூர்த்தி செய்யவில்லை. அதையடுத்து, விண்ணப்பிக்காத இம்மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்க சென்டாக் முடிவு செய்து நாளை 10ம் தேதி வரை காலக்கெடுவை நீட்டிப்பு செய்துள்ளது.
இதற்கிடையில், குடியிருப்பு, குடியுரிமை, சாதி சான்றிதழ்கள் இன்னும் பெறவில்லை. எனவே விண்ணப்பிக்க காலக்கெடுவை நீட்டிக்கவேண்டும் என, பெற்றோர்கள், மாணவர்கள் சென்டாக் கதவை தட்டி வருகின்றனர். அதையடுத்து சென்டாக் நிர்வாகம் சான்றிதழ் சமர்ப்பிப்பு விஷயத்தில் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அதில், சென்டாக்கின் நீட் அல்லாத படிப்புகளுக்கு நாளை 10ம் தேதியுடன் காலக்கெடு முடிகிறது. எனவே புதுப்பிக்கபட்ட சான்றிதழ் கிடைக்கவில்லையெனில், கையில் உள்ள பழைய வருவாய் சான்றிதழ்கள் கொண்டு விண்ணப்பிக்கலாம்.
புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ் கிடைத்த பிறகு தங்களுடைய டேஷ்போர்டு வாயிலாக சென்டாக்கிற்கு தெரிவித்து சான்றிதழை சமர்ப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 0413-2655570 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.