/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மோசடி அழைப்புகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்
/
மோசடி அழைப்புகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்
ADDED : ஏப் 01, 2024 06:29 AM
புதுச்சேரி : வெளிநாட்டு செல்போன் எண்களிலிருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என தொலைதொடர்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தொலை தொடர்பு துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தொலை தொடர்புத்துறை எனக்கூறி மோசடி அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தெரியாத எண்களிலிருந்து வரும் வாட்ஸ்ஆப் அழைப்புகளுக்குப் பதிலளிக்கவோ அல்லது வெளிநாட்டு எண்களிலிருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்கவோ, இந்த எண்களுக்கு, எந்த தனிப்பட்ட விவரங்களையும் +92-xxxxxxxxx என்ற முதலெழுத்துக்களுடன் பகிரவோ வேண்டாம்.
தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் என்று கூறிக்கொள்ளும் மோசடி யாளர்கள், ஒருவருக்கு அழைப்பை மேற்கொண்டு, அந்த செல்போன் எண் சட்டவிரோத செயல்களில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறி, அவர்களின் மொபைல் எண்களின் இணைப்பைத் துண்டிக்கப் போவதாக அச்சுறுத்துவதாக பலரிடமிருந்து புகார்கள் வந்துள்ளன.
இதனைத் தொடர்ந்தே, தகவல் தொடர்புத் துறை இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. கடந்த 30 நாள்களுக்குள் பெறப்பட்ட மோசடி அழைப்புகள், எஸ்.எம்.எஸ்., செய்திகள் மற்றும் வாட்ஸ் அப் செய்திகள் குறித்து மக்கள் www.sancharsaathi.gov.in புகார் செய்யலாம்.
இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

