/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது
/
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது
ADDED : மார் 03, 2025 03:56 AM
புதுச்சேரி: லாஸ்பேட்டையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டை குடியிருப்பு பகுதியில், கடந்த 27ம் தேதி நள்ளிரவு, 10 வயது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அவரது குடும்பத்தினர் ஓடிச்சென்று பார்த்தனர்.
அப்போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் அங்கிருந்து தப்பியோடினர்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இதில் தொடர்புடைய வில்லியனுாரை சேர்ந்த கூலி தொழிலாளியான வினோத்குமாரை, 22; போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தினர்.
அதில், வினோத்குமாருக் கும், லாஸ்பேட்டையை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் இன்ஸ் டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதையடுத்து, அந்த பெண்ணை பார்க்க வினோத்குமார், அடிக்கடி இரவு நேரங்களில் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
கடந்த 27ம் தேதி மதுபோதையில், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற வினோத்குமார், அங்கு அவரது கணவர் வீட்டில் இருந்ததால், அச்சத்தில் பக்கத்து வீட்டிற்குள் திடீரென நுழைந்துள்ளார்.
போதையில் இருந்த அவர், அங்கு துாங்கி கொண்டிருந்த 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
சிறுமியின் சத்தம் கேட்டு, குடும்பத்தினர் விழித்ததால், அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்தது.
இதையடுத்து, வினோத்குமாரை கைது செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக, உடன் வந்த மேலும் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.