ADDED : ஜூன் 22, 2026 09:20 PM
புதுச்சேரி: கத்தியுடன் பதுங்கி இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் நேற்று காலை 11 மணியளவில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது வில்லியனுர் மூர்த்தி நகர் மதுபானக்கடை பின்புறம் வாலிபர் ஒருவர் கத்தியை வைத்து கொண்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த வாலிபர் ஒருவர் தப்பியோட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்து விசாரித்தனர். அதில் அவர் வில்லியனுார் வல்லுவன்பேட் பகுதியைச் சேர்ந்த ஜீவரத்தினம், 34; என்பதும், முன் விரோதத்தில் ஒருவரை பழிவாங்க பதுங்கி இருப்பது தெரியவந்தது. அதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
