/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குட்கா பொருட்கள் விற்ற வாலிபர் கைது
/
குட்கா பொருட்கள் விற்ற வாலிபர் கைது
ADDED : மார் 29, 2024 04:41 AM

நெட்டப்பாக்கம்: தனியார் கம்பெனி ஊழியர்களுக்கு குட்கா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் மாரிமுத்து, சத்தியமூர்த்தி, யுவராஜ், ஊர்காவல் படை போலீஸ் வினோத் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 9.39 மணியளவில் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது ஏரிப்பாக்கம் தனியார் கம்பெனி எதிரில் பைக்கில் சாக்கு மூட்டையுன் நின்று இருந்த வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றார்.
அவரை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் விசாரனை நடத்தினர். அதில் அவர் மடுகரை ராம்ஜி நகரைச் சேர்ந்த ஆதிநாராயணன், 21; என்பதும் அவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை இரண்டு சாக்கு மூட்டையில் வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ரூ. 14 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, ஆதி நாராயணன் மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.

