தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைக் திருடிய வாலிபர் கைது 

பைக் திருடிய வாலிபர் கைது 

பைக் திருடிய வாலிபர் கைது 


ADDED : மே 20, 2026 08:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 08:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: திருக்கனுார் தனியார் ஒயின்ஷாப் எதிரே நிறுத்தப்பட்டிருந்த பைக்கை திருடிய விழுப்புரத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

விழுப்புரம், பனையபுரம், 2வது தெருவை சேர்ந்தவர் முருகன், 49; கூலி தொழிலாளி. இவர் கடந்த 13ம் தேதி தனது பி.ஓய் 01 பிஏ 1944 பதிவெண் கொண்ட பைக்கில் நண்பருடன் திருக்கனுார், கடை வீதியில் உள்ள தனியார் ஓயின்ஷாப்பிற்கு சென்றுள்ளார். பைக்கை ஒயின்ஷாப் எதிரே நிறுத்திவிட்டு, உள்ளே சென்று திரும்பி வந்து பார்த்தபோது, பைக்கை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து முருகன் அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருந்தனர்.

அதில், அங்குள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை பார்வையிட்டபோது, வாலிபர் ஒருவர் பைக் திருடி செல்வது தெரியவந்தது. இதையடுத்து, பைக்கை திருடி சென்றது விழுப்புரம், தென்னமாதேவி, காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கோபால், 44; என்பதும், விக்கிரவாண்டி ரயில் நிலையத்தில் சுமைதுாக்கும் தொழிலாளி என்பதும் தெரியவந்தது. 

தொடர்ந்து, கோபாலை கைது செய்த போலீசார், அவர் திருடி சென்ற பைக்கை பறிமுதல் செய்தனர். பின், நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us