தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணல் திருடிய வாலிபர் கைது

மணல் திருடிய வாலிபர் கைது

மணல் திருடிய வாலிபர் கைது


ADDED : ஜூன் 11, 2024 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2024 05:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: விவசாய நிலத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாகூர் அடுத்துள்ள சோரியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் 70; இவர் கடலுார் வட்டத்தில் வட்டாச்சியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு சொந்தமான நிலம் குருவிநத்தம் தென்பெண்ணையாற்றங்கரை பகுதியில் உள்ளது. இவரது வயலை சேதப்படுத்தி அங்கிருந்த மணலை, கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் பைக் மூலமாக திருடிச் சென்றுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து, புதுச்சேரி கவர்னருக்கு இ.மெயில் மூலமாக புகார் அனுப்பி இருந்தார்.

மணல் திருட்டு சம்பவம் தொடர்பாக பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், சோரியாங்குப்பம் மேட்டுத் தெருவை சேர்ந்த நாராயணன் மகன் வீரமணி 24; என்பவர் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய பல்சர் பைக்கையும் பறிமுதல் செய்தனர். வீரமணியை, புதுச்சேரி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us