தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடல்  அலையில் சிக்கி வாலிபர் பலி

கடல்  அலையில் சிக்கி வாலிபர் பலி

கடல்  அலையில் சிக்கி வாலிபர் பலி


ADDED : மே 11, 2024 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2024 04:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே நண்பர்களுடன் கடலில் குளித்த வாலிபர் அலையில் சிக்கி உயிரிழந்தார்.

கிருமாம்பாக்கம் பேட் பகுதியை சேர்ந்தவர் குணசீலன் மகன் ஹரிசுதன், 19; ஐ.டி.ஐ. படித்து வந்தார்.

இவர், குருவிநத்தம் பெரியார் நகரில் உள்ள தனது அக்கா மீரா வீட் டில் வசித்து வந்தார்.

நேற்று மாலை தனது நண்பர்கள் 9 பேருடன், புதுக்குப்பம் - மணப்பட்டு பல்மைரா கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அனைவரும் கடலில் குளித்து கொண்டிருந்தபோது, ராட்சத அலையில் சிக்கி ஹரிசுதன் மாயமானார்.

தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளூர் மீனவர்கள், மற்றும் கடலோரா காவல் படையினரின் மூலமாக ஹரிசுதனை தேடினர்.

பனித்திட்டு கடற்கரை பகுதியில் ஹரிசுதன் மயங்கி நிலையில் கிடந்தவரை, சப் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் மற்றும் போலீசார், மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us