/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.1 லட்சம் கடன் பெற 48 ஆயிரம் ரூபாய் கட்டணம் மோசடி கும்பலிடம் ஏமாந்த வாலிபர்

ADDED : மார் 04, 2025 09:44 PM
புதுச்சேரி : புதுச்சேரியில் 4 பேரிடம் ரூ. 1.89 லட்சத்தை மோசடி செய்த சைபர் கிரைம் மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், குறைந்த வட்டியில் 1 லட்சம் வரை கடன் தருவதாக கூறியுள்ளார். உடனடி லோன் பெற செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.இதை நம்பிய கோகுல்ராஜ் மர்ம நபருக்கு 48 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்துள்ளார்.
பூமியான்பேட்டையை சேர்ந்த கோகுலீஸ்வரனை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து வீட்டிலிருந்தபடியே அதிகம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார்.இதைநம்பி, கோகுலீஸ்வரன் 40 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து ஏமாந்துள்ளார்.புதுச்சேரி தியாகராஜா வீதியை சேர்ந்த விஜயகுமாரின் வாட்ஸ் ஆப்பில் வந்த விளம்பர லிங்க் மூலம் 36 ஆயிரத்திற்கு எல்.இ.டி., டி.வி., ஆர்டர் செய்து, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்துள்ளார்.இதேபோல், காரைக்காலை சேர்ந்த அனிதா 65 ஆயிரம் என மொத்தம் 4 பேர் 1 லட்சத்து 89 ஆயிரம் ரூபாயை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர்.
இது குறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.